0


பசங்க–2 ரிலீசுக்கு கட்–அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–


சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள்.


உங்களின் மனிதநேய பணி சிறக்க என் வாழ்த்துக்கள். அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ போஸ்டர்கள் ஓட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை.


இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாகவே சொல்லியிருக்கிறேன். வரும் டிசம்பர் 24–ந்தேதி வெளியாக உள்ள பசங்க–2 திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலையைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.


நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல் பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்.


இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

Post a Comment

 
Top