0


சைதாப்பேட்டை கோர்ட்டில் சிம்பு, அனிருத் மீது வக்கீல் வழக்கு

பெண்களை இழிவு படுத்தும் வகையில் நடிகர் சிம்பு, இயக்குனர் அனிருத் இசையில் பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு பெண்கள் சங்கமும், அமைப்புகளும் இருவருக்கும் எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. இருவர் மீதும் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை 9–வது பெருநகர் நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் காசி என்பவர் சிம்பு, அனிருத் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–


பெண்களை அவமானப்படுத்தும் வகையில் சிம்பு, அனிருத் பாடல் அமைந்துள்ளது. அந்த பாடல் வரிகள் பெண் சமுதாயத்தையே வேதனைப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளது.


பெண்களை போற்றக் கூடிய இத்திருநாட்டில் மிக கொச்சையான வார்த்தைகளால் பாடல் பாடி இசை அமைத்த சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு ஒருபாடமாக அமைய வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


இந்த மனு மீதான விசாரணையை வருகிற 30–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜோசப் பிலிப் அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

 
Top