கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச
நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதித்தது.
இதனையடுத்து, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த
ஆண்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
இதற்கான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி
தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் கிராம அமைப்புகளும் கோரிக்கை
வைத்துள்ளார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள்
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர்
மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நடிகையான
ஏமி ஜாக்ஸன், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரசாரம் செய்துவருகிறார். தன்னுடைய
ட்விட்டர் பக்கத்தில் ஜல்லிகட்டு நடத்தப்படக்கூடாது. கிரிக்கெட் வீரர்களும்
நடிகர்களும் பெடாஇந்தியாவின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்து
இயக்கத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தக்
கையெழுத்து இயக்கத்தில் விராட் கோலி, வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா,
பிபாஷா பாசு போன்ற பிரபலங்கள் கையெடுத்திட்டு தங்கள் ஆதரவைப் பதிவு
செய்துள்ளார்கள்.
ஏமி ஜாக்ஸன் 2.0, தெறி, கெத்து போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
Post a Comment