0

வாழும் காலத்தில் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே பெருமை: சமந்தா

சமந்தா தமிழ் – தெலுங்கு திரை உலகில் ‘பிசி’ நடிகையாக இருக்கிறார்.


தமிழில் தனுசுடன் நடித்துள்ள தங்கமகன் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. அடுத்து வட சென்னையில் தனுசுடன் நடிக்கிறார். இதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். விஜய்யுடன் ‘தெறி’ சூர்யாவுடன் ‘24’ ஆகிய படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.


சினிமா தவிர பொது நலனிலும் சமூக அக்கறையுடன் சமந்தா செயல்பட தொடங்கி இருக்கிறார். இவர் இணைந்து பணியாற்றி வரும் பிரதியுலுஷா புண்டேசன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.


சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள சேதத்தால் துடி துடித்துப்போன சமந்தா, தெலுங்கு திரை உலகினருடன் சேர்ந்து வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பினார். வெள்ள நிவாரண நிதியாக ரூ. 30 லட்சம் வழங்கி பிரபல நாயகர்களையே திகைக்க வைத்தார்.


அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும், அடுத்தவருக்கு உதவ வேண்டுமென்று சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். இது குறித்து சமந்தா கூறும்போது...


நாட்டில் வறுமை ஒழிய வேண்டும். கொடிய நோய் வராமல் இருக்கவேண்டும். வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது நமது கடமை. அதைவிட பெருமை எதுவும் இல்லை. இதை அனைவரும் கடை பிடித்தால்

Post a Comment

 
Top