ஹாலிவுட்டில்
தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு
உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்
போது, வரவேற்பு இரண்டு மடங்காகும்.
பிவிஆர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பாயின்ட் பிரேக்’ என்ற ஆங்கில படம் தமிழில் அதே தலைப்புடன் ‘அச்சம் தாண்டி சிகரம் தொடு’ என்கிற பின்குறிப்புடன் வெளியாக உள்ளது.
கீனு ரீவ்ஸ் மற்றும் பேட்ரிக் ஸ்வாய்ஸ் நடித்து 1991-இல் வெளிவந்த ‘பாயின்ட் பிரேக்’ படத்தின் புதிய, மாறுதல்கள் கொண்ட மறு அவதாரம் இப்படம். திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் மேலும் மெருகு சேர்த்துள்ளார்கள். படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் எரிக்சன் கோர்.
பனிமலையில் சறுக்கி ஓடுதல், மலை ஏறுதல், தக்க உபகரணங்கள் துணை கொண்டு விண்ணில் பறந்து செல்லுதல், நீண்ட தூரம் சைக்கிளில் செல்லுதல் ஆகிய வீர விளையாட்டுகளில் ஈடுபடும் ஒரு சிலர், திருட்டு தொழிலில் ஈடுபடுவது பற்றி எப்.பி.ஐ நிறுவனத்திற்கு தெரியவருகிறது.
இளம் எப்.பி.ஐ அதிகாரியான ஜானி உட்டா இது பற்றி புலனாய்வு செய்வதற்கு தேர்வு செய்யப்படுகிறார். இந்த விளையாட்டு வீரர்களின் லீலைகளை பற்றி துப்பு துலக்க களத்தில் இறங்குகிறார் ஜானி.
படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டு தொடர்பான காட்சிகளில், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களும் நடித்துள்ளனர்.
இப்படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது.

Post a Comment