Home
»
tamil cinema news
» சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திரண்ட ரசிகர்கள்: அனுமதி வாங்காததால் போலீசார் கலைத்தனர்
சிம்பு
பாடிய ‘பீப்’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர்
போராட்டம் நடத்தினார்கள். சிம்புவுக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு
தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்ய போலீசார் முடிவு
செய்தனர்.
இந்த நிலையில் சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த சென்னையை சேர்ந்த
அவரது ரசிகர்கள் சுமார் 50 பேர் சதீஷ், ஹரிகரன் தலைமையில் இன்று காலை
நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே திரண்டனர். தகவல் கிடைத்ததும்
நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அங்கு நின்ற ரசிகர்களிடம், அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்த
குவிந்துள்ளீர்கள். உங்களை கைது செய்யும் சூழ்நிலை ஏற்படும். எனவே கலைந்து
செல்லும்படி எச்சரித்தனர்.
இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து புறப்பட்டு தி.நகர் இந்திபிரசார
தெருவில் உள்ள டி.ராஜேந்தர் வீட்டில் குவிந்தனர். சுமார் 100–க்கும்
மேற்பட்டோர் சிம்புவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதுபற்றி ரசிகர் ஹரிகரன்
கூறும்போது, ‘சிம்புவின் பாடலை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Post a Comment