தமிழ்
மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா.
30 வயதை கடந்தும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டி வருமாறு,என்னை நாகார்ஜுனா தான் சினிமா
உலகுக்கு அழைத்து வந்தார். சினிமா வாசனை இல்லாத குடும்பத்தில் இருந்து நான்
சினிமாவுக்கு வந்ததால் முதலில் நடிப்பு என்பது கஷ்டமாக தெரிந்தது.
சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுகளை நாகார்ஜுனா சொல்லிக் கொடுத்து புரிய
வைத்தார்.
இப்போது சினிமாவில் எனக்கு பக்குவம் வந்து விட்டது. ஆக்ஷன் ஹீரோயினாக
நடிப்பது மிகவும் கஷ்டம். சண்டை காட்சியின்போது எகிறிக் குதிப்பது, ஓடுவது
போன்றவற்றை எளிதாக செய்து விடலாம். அதன் பிறகு கை, கால்கள் வலிக்கும்
போதுதான் அதில் உள்ள சிரமம் தெரிய வரும். ஆக்ஷன் ஹீரோக்கள் எப்படி
கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்பதை இப்போது புரிந்துள்ளேன்.
எனக்கு அரசியல் தெரியாது. நான் அரசியலை விரும்பவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. வேறு நல்ல விஷயங்களில் ஈடுபடவே விரும்புகிறேன்.
எனது தோழிகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் கணவர், குழந்தை,
குடும்பம் என்று வசிக்கிறார்கள். என் தோழிகள் என்னை பார்க்கும் போதெல்லாம்
நீ இப்போதும் சின்னப் பெண்ணாகவே இருக்கிறாய் என்று சொல்வார்கள்.
யோகா செய்வதால்தான் அழகாக இருக்க முடிகிறது. எனக்கென்று எதிர்கால
திட்டம் எதுவும் இல்லை. வாழ்க்கையில் அவ்வப்போது என்ன நடக்கிறதோ அதற்கு
ஏற்றார்போல் என்னை மாற்றிக் கொள்கிறேன். பக்குவப்படுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment