0

தமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் ரஜினியின் நாயகிகள்

VIDEO : CONFIRMED- Alia To Romance Ranbir In Imtiaz Ali's Next



You need to upgrade your Adobe Flash Player to watch this video.


Get Adobe Flash player

0

 

0
0


தமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் ரஜினியின் நாயகிகள்


12/18/2015 1:56:41 PM

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்திருக்கும் தடையை அரசு தொடரவேண்டுமென்று பாலிவுட், கோலிவுட் நடிக நடிகைகள் கூறியுள்ளனர்.


‘விலங்குகள் உரிமைகளுக்காக வாதிடும் குழு’ என்ற விலங்குகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, காளைச்சண்டை, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகளை பயன்படுத்தும்  போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை இணைக்கும் வகையில் சில திருத்தங்களைச் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.


‘ஜல்லிக்கட்டு’ போட்டியின்போது காளை மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறது. மேலும் வீரர்களால் காளை மாடுகள் துரத்திச்செல்லப்பட்டு உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச்செல்லுதல், கத்தியால் குத்துதல் என பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகிறது.


பொதுமக்கள், பார்வையாளர்கள் காயம் அடைதல் மற்றும் உயிரிழப்புக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ஆகவே விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பு கருதி, காளைகளைக் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகள் சார்ந்த போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையைத் தொடரவேண்டும்.


மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை, ஏராளமான ஆதரவு கையெழுத்துக்கள் வாங்கி விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது.


இந்த மனுவில் பிரபல நடிகைகள் வித்யா பாலன், பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா, ஷில்பா ஷெட்டி, ரவீனா தாண்டன், எமி ஜாக்சன், ஜாக்குலின் பெர்னான்டஸ், ரிச்சா சதா, நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சோனு சூட், வித்யூத் ஜம்வால், ததானி, கபில் சர்மா ஆதித்யா ஷெட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்-நடிகைகளும்  கையெழுத்துப் போட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=19785&id1=3#sthash.8fEbyBvS.dpuf

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான இந்தியப் படமாக மராத்தி மொழித் திரைப்படமான கோர்ட், போட்டியில் கலந்துகொண்டது. ஆனால் அந்தப் படம் தற்போது அடுத்தச் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்களிலிருந்து, புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கிய கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு, ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான இந்தியப் படமாக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற கோர்ட் திரைப்படம், இதுவரை 19 தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, 16 விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் ஆஸ்கர் ரேஸிலிருந்து கோர்ட் படம் வெளியேறியுள்ளது. அடுத்தச் சுற்றுக்கான 9 படங்களில் கோர்ட் படம் தேர்வாகவில்லை. The Brand New Testament (பெல்ஜியம்), Embrace of the Serpent (கொலம்பியா), A War (டென்மார்க்), The Fencer (ஃபின்லாந்து), Mustang (பிரான்சு), Labyrinth of Lies (ஜெர்மனி) Son of Saul (ஹங்கேரி), Viva (அயர்லாந்து) மற்றும் Theeb (ஜோர்டான்) ஆகிய 9 நாட்டுப் படங்கள் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியுள்ளன. இதிலிருந்து 5 படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் படங்கள் பற்றிய அறிவிப்பு, 2016, ஜனவரி 14-ம் தேதி அறிவிக்கப்படும். பிப்ரவரி 28-ம் தேதி அன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கர் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’  ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன.

Post a Comment

 
Top