0
பூலோகம்

ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி உள்ள படம் ‘பூலோகம்’. இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுத, என்.கல்யாண் கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

வட சென்னையில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றது. அதனால், படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. தற்போது இப்படத்தை இம்மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஜெயம் ரவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், நீண்டகாலமாக உருவான ‘பூலோகம்’ படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Post a Comment

 
Top