0
மகதீரா


ஏ.வி.வி.எஸ். நாயுடு வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பத்ரகாளி பிரசாத், வெங்கட்ராவ் ஆகியோர் தயாரிக்கும் படம் "மகதீரா". ராம்சரண், அல்லு அர்ஜுன் நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற எவடு படமே தமிழில் இப்பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. நாயகிகளாக காஜல்அகர்வால், எமிஜாக்சன், சுருதிஹாசன் நடிக்கின்றனர். சாய்குமார், கிருஷ்ணமோகன், ஜெயசுதா ஆகியோரும் உள்ளனர்.

இப்படத்தை வம்சிபைடிப் பள்ளி இயக்குகிறார். ஏ.கே.ஏ. ராஜராஜா வசனம் எழுதி தமிழாக்கம் செய்கிறார். மகதீரா படம் பற்றி அவர் சொல்கிறார்.

ஆக்ஷன் கதையம்சம் உள்ள படமாக வருகிறது. அல்லு அர்ஜுன், காஜல்அகர்வால் காதலர்கள். காஜல் மீது தூத்துக்குடியில் உள்ள தாதாவுக்கும் காதல் வருகிறது. அவனிடம் இருந்து இருவரும் தப்பி ஓடுகிறார்கள். வில்லன் அவர்களை மடக்கி பிடித்து காஜலை கொல்கிறான். அல்லு அர்ஜுனை எரிக்கிறான். அதில் இருந்து அல்லு அர்ஜுன் தப்பும் போது முகம் எரிந்து விடுகிறது. டாக்டர்கள் முயற்சியால் ராம்சரண் முகம் அல்லு அர்ஜுனுக்கு பொருத்தப்படுகிறது. வில்லன் கூட்டத்தை அவர் எப்படி பழி தீர்க்கிறார் என்பது கதை.

ஒளிப்பதிவு: பி.சி.ராம் பிரசாத், இசை: தேவிஸ்ரீ பிரசாத், பாடல்: விவேகா, சினேகன், அருண்பாரதி.

Post a Comment

 
Top